The Story about me

by hepsy rosemary

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் முதுகலை முதல்  முனைவர் பட்டம் வரைப் பயின்று  அத்துறையிலேயே தலைவராகப் பணியாற்றி வருபவர் முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அவர்,  கேரளப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்களிடம்          “வீரசோழிய நேமிநாதம்  – ஓர் ஒப்பாய்வு”  என்னும் தலைப்பில்  ஆய்வுசெய்து 2007 ஆம் ஆண்டு முனைவர்பட்டம்  பெற்றார்.  இவர்  தமிழ்  மலையாள இலக்கணம், இலக்கியங்களில் மிகுந்த ஆர்வமிக்கவர்.

     வீரசோழியம் நேமிநாதம் ஒரு பார்வை (2007), ஒப்பீட்டு நோக்கில் இலக்கணச் சிந்தனைகள் (2008), தமிழ் வடமொழி இலக்கண உறவு (2011), சமத்துவப் பேராசிரியர் கி. நாச்சிமுத்து (2015),  வண்ணச்சினைச்சொல் (2017),   எழுத்திலக்கண மரபு (2019)  என்னும்  நூல்களை எழுதியுள்ளார்கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வெளியிட்ட  மலையாளம் தமிழ் அகராதியின் இணைப்பதிப்பாசிரியராகச் செயல்பட்டுள்ளார்கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வெளியிட்ட இலக்கியச்சாரல் (2015),  இலக்கணத் தேன்துளிகள்      (2015),  தமிழ் இலக்கியத்தில் நாழிகைக் கற்கள் (2005)  என்னும் நூல்களுக்கு  இணைப்பதிப்பாசிரியராகவும் பெண்ணியத்தின் புதியபோக்குகள் (2017),  சேரச்செந்தமிழ் இலக்கியம்  (இரண்டு தொகுதிகள் 2019)  என்னும் நூல்களுக்குப் பதிப்பாசிரியராகவும் செயல்பட்டு நூல்களை வெளியிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு  சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான  பாரதி தமிழ்ச்செம்மல் விருதும் 2018 ஆம் ஆண்டு SVASH வழங்கிய  Best Faculty  விருதும் 2019 ஆம் ஆண்டு   கவியரசர் கண்ணதாசனின்ஆய்வுச்செம்மல்”  விருதும் பெற்றூள்ளார். இவரது வழிகாட்டுதலின் கீழ் ஆறு ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வேட்டைச் சமர்ப்பித்துள்ளனர். நான்குபேர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

·         முத்துக்கமலம், ஸ்பார்க்லிங்  என்னும் இணைய இதழ்களின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டு வருகிறார்.

·        பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழில் 15 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

·         தேசியக் கருத்தரங்கு, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்று 60 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

·         பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளால்  ஒருங்கிணைக்கப்பட்ட கருத்தரங்குகள், பயிலரங்குகளில் வல்லுநராகச் செயல்பட்டமை குறிப்பிடத்தக்கவை.

·         கேரளப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில்  10 க்கும் மேற்பட்ட தேசிய பன்னாட்டுக் கருத்தரங்குகளுக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டுள்ளார்.

·         2019 ஆம் ஆண்டில்  பல்கலைக்கழகக் கல்லூரி,  பேராசிரியர்களுக்கான தமிழ் புத்தொளிப் பயிற்சியைக்  கேரளப் பல்கலைக்கழக  UGC – HRDC இல் முதன்முதலில் ஒருங்கிணைத்த பெருமை இவரையே சாரும்.

·         தொடர்ந்து மும்முறை புத்தொளிப் பயிற்சியை ஒருங்கிணைத்துள்ளார்.

·         தற்போது தமிழ்த் துறையில் உருவாக்கப்பட்டச் சொல்லடைவுகளைத் தொகுத்து மின்னகராதி, சொல் தரவகம் உருவாக்கும் பணியில்  முனைப்போடு  செயல்பட்டு வருகிறார். .

 

தமிழ்த்துறைத் தலைவர்

கேரளப் பல்கலைக்கழகம்

திருவனந்தபுரம்

Mob:  9495656167

 hepsy.rosemary@gmail.com